Thursday, February 2, 2012

என் '' நண்பன் '' போல யாரு மச்சான் ???

நண்பன் , இது இந்தியில்[3 IDIOTS ]என்று வெளியிடப்பட்ட படம் ஆகும். இப் படத்தின் தமிழ் பதிப்பு தான் '' நண்பன் '' . அமோக வரவேற்பை பெற்றது . இதற்கு காரணமே இப் படத்தில் நடித்தவர்களே என்று கூறலாம் . இதையல்லாவற்றிலும் இயக்குனர்  ஷங்கரின் நுற்பமான இயக்கமே காரணம். விஜய் , ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பு பிரமாதம் குறிப்பாக சத்தியராஜின் நடிப்பிற்கு உன்மையிலும் ஒரு பெரிய விருது குடுக்கலாம் . சத்யன் கதாபாத்திரத்துகு ஏற்ற பொருந்தியுள்ளார்.


நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில் நிச்சயமா ஜெயிப்பீர்கள் என்பதுதான்.படம் முடிந்து வெளியே வந்தாலும் நம் நினைவுக்கு வருவது நாம் பார்த்தது விஜய் படம்தானா என்ற எண்ணம்தான். ஷங்கர் இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பாப்பு இருந்தது அதை அதிகமாகவே நிறைவேற்றியிருக்கிறது நண்பன்.



மொத்தத்தில் பஞ்சவன் பாரிவேந்தன் ஒரு ''பாரி'' கொடை வள்ளல் !! இவனைப் போல் நண்பன் கிடைப்பது அரிது . 

ஆல்ல் இச் நெல்ல் என்ற மந்திரம் உண்மையிலும் ஒரு சக்தி வாய்ந்தது . ஆக மொத்தத்தில் இப் படத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடங்கள் பல ...

Sunday, March 6, 2011

சீடன்


கடவுளை வைத்து படம் எடுத்தால் மக்களிடம் போய் சேராது என்று இணங்க ஒரு வித்தியாசமான முறையில் எடுத்துளார் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா அப்படமே
சீடன் . நல்லவோரு கதைகளம் மற்றும் நடிப்பு இதுவே சீடனின் சொல்லக்கூடிய பெருமை.

அன்னன்யாவின் அப்பற்ற நடிப்பு பிரமாதம் . கிருஸ்ணா தனது பங்கை நன்றாக செய்துள்ளார் . அனன்யா தனது காதல் பற்றி தன் பிடித்த கடவுளான எம் பெருமான் முருகனிடம் சொல்வதும் தனது கவலைகளை முறையுடுவதும் வெகுளித்தனமாக இருந்தாலும் பார்பதற்கு குளிர்ச்சியாக இருந்தது.

தனுஷ் ரூபத்தில் சமையல்காரராக அந்த வீட்டுக்கு வருகிறார் முருகன் என்றும் சொல்லலாம் இல்லாவிடில் முருகனால் அனுப்பப்பட்ட சீடன் என்று கூறலாம் .. பிறகு காதல் ஜோடியை எப்படி சேத்து வைக்கிறார் என்பதுதான் படம்


அனன்யா கிருஸ்னாவின் காதல் கைசேருமா என்று புலம்பும் நேரத்தில் தனுஸ் தன் சொற்கலாலும் தன் செயல்களாலும் அனன்யாவுக்கு புரிய வைக்கிறார் . தனுஸ் மயிலிறகை வைத்து பண்ணும் அற்புதத்தை பாரட்டலாம் . அதை பார்க்கும் பொது உன்மையில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்க்கு நம்பிக்கை ஊட்டுகிறது இப் படம் . 


போலிச்சாமியாராக நடித்திருக்கும் விவேக்கின் நகைச்சுவை சரவெடியாக அமைந்திருக்கிறது.சுஹாசினி, ஷீலா தம் பங்கை காட்டியுள்ளனர் . இசையமைப்பாளர் தீனா,பாடல்களிலும், பின்னணி இசையில் மோலோடிகளை வாரி இறைத்திருக்கும் தீனா, முருகன் பாடலின் மூலம் தாளம் போடவும் வைத்திருக்கிறார்.


Tuesday, November 9, 2010

உத்தம புத்திரன்

மீண்டும் இயக்குனர் மித்திரன் ஜவகர்ரும் இளம் புயல் தனுஸ்சும் சேர்ந்து கைகோர்த்த நேரம் தீபாவளிதான் . யாரடி நீ மோகினி மாபெரும் வெற்றியை தொடர்ந்து குட்டி எக்ஸ்பிரஸ் முடித்து தற்பொழுது  உத்தம புத்திரன் அடுத்த கட்ட வெற்றியை நோக்கி செல்லுகிறது . நல்லதோர் குடும்பம் பழ்கலைகளகம் என்பதற்கு எடுத்துக் காட்டு .





தெலுங்கில் வெளிவந்த '' ரெடி '' படத்தின் மறுபதிவே இது . ஆனால் இப் படத்தில் இயக்குனர் தனது முழு முயற்சியை காட்டியுள்ளார் . விஜய் ஆன்டனியின் இசை வழ்க்கம்போல அதிரடியாகத்தான் இருக்கும் ஆனால் இப் படத்தில் ஒரே சரவெடி தான் .

பாடல்கள் ஒவ்வொன்றும் புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது . ஜெனிலியா அப்பற்ற அழகு டா சாமி . படம்முழுவதும் ஜெனி ஜெனி ஜெனி தான் . நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்துள்ளார் . தன் ஒரு லுக்காலே பார்வையாளர்களை சிறைக்கொண்டார் . தனுஸ் தனுஸ் தான் , ஸ்டையில் அப்படியே தனது மாமாவை போலவேதான் . ஆனால் எளிமை .


உண்மையிலும் தனுஸ்சுக்கு ஏற்ற ஜோடிதான் ஜெனிலியா . அதேபோல் பல பல கோ ஸ்டார்களும் நடித்துள்ளனர் . எல்லோருக்கும் ஒரே சமயத்தில் வாய்ப்பு கோடுத்தது பெரிய விடயம் . விவேக்கும் தனுஸ்சும் சேர்ந்து அடிக்கும் காமெடி அருமை . அப்பாவியாக வருகிறார் விவேக் .


மொத்தத்தில் உத்தம புத்திரன் குடும்பத்துடன் சென்று உல்லாசமாக சிரித்து அனுபவித்து வரவேண்டுய ஒரு காதல் , குடும்பப் கலக்கல் படம் ........
இயக்குனர் உண்மையிலும் ஒரு உத்தமபுத்திரன் தான் என்பதில் சந்தேகமில்லை ......

Wednesday, October 6, 2010

எந்திரன் , வந்தான் வென்றான்



ஒரு புதிய உலகத்துக்கு அழைத்துச்சென்றார் இயக்குனர் ஷங்கர். தமிழ் திரையுலகிற்கே ஒரு சாதனை படைத்தார் . எந்திரன் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட தந்திரன்.

ரஜினியின் ஸ்டைலும் , அழகும் இன்னும் போகல ....
ஷங்கரின் கடின உழைப்பை கண்டிப்பாக பாரட்ட வேண்டும் . ஒவ்வொரு அணுக்களையும் செதுக்கி செதுக்கி அழகாக எடுத்துள்ளார் . 

ஐஸ்வர்யாராயின் அப்பழுக்கற்ற நடிப்பு அருமை . தனது அழகாலேயே  எல்லோரையும் எந்திரத்தைப்போலவே கவர்ந்து சென்றார் . ரோபோ ரஜினியின் ஸ்டைலே தனி ஸ்டைல் தான் . உண்மையிலும் ரஜினிக்கு நிகர்ராக ரோபோ ரஜினி என்பதை நன்றாக காட்டியுள்ளார் . ரோபோ ரஜினியின் மிரட்டல்கள் அற்புதம் .


பாடல்கள் ஒவ்வொன்றும் புது புது அனுபவத்தை கொடுக்கின்றது. அழகான இடங்களை எல்லாம் தன் சிறிய திரைக்குள் கொண்டு வந்தது பாரட்டத்தக்கது.
ஏ.ஆர். ரகுமான் வழக்கம் போல் இசையில் தனது கைவரிசையை காட்டியுள்ளார் . 





மொத்தத்தில் ''விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி'' என்பதை புரியவைத்துள்ளார் இயக்குனர்.

Saturday, September 11, 2010

சிவா மனசுல சக்தி part 2 [ பாஸ் [எ] பாஸ்கரன் ]

பாஸ் [எ] பாஸ்கரன் படத்தை திரும்ப திரும்ப பார்க்கும் அளவுக்கு அருமையாக எடுத்திருக்கிறார் இயக்குனர் . நீண்ட இடைவெளிக்குப் பின் நயந்தாரா நடித்துள்ளார் .
  
இப் படத்தை குடும்பத்துடன் ரசித்துப்பார்க்கலாம் .பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சிரிக்கவைக்கும் நகைச்சுவை காட்சிகள். சந்தானம் - ஆர்யா வின் கலக்கல் திரையரங்கையே  அதிரவைத்தது . '' சிவா மனசுல சக்தி '' நம்மை ரொம்பவும் சிரிக்க வைத்த சந்தானம் , இப் படத்தில் அதிகமாக சிரிக்க வைக்கிறார் . மொத்தத்தில் சந்தானம் இல்லையேல் இப் படம் இல்லை . 


பாடல்கள் அவ்வளவு கைகொடுக்கவில்லை .ஓரிரு பாடல் அருமையாக இருந்தது . '' நண்பேன் டா ... '' என்று வார்ததை கூரும்போதெல்லாம்  திரையரங்கு முழுவதும் இடிமுழக்கம் போல் கைதட்டல்கள் எழுகிறது .

  
இயக்குனர் M .ராஜேஸ்  ஆரியாவையும் , சந்தானத்தையும் நன்றாக பயன்படுத்தியுள்ளார். இது இவரது இரண்டாவது படமாகும் .  ''சிவா மனசுல சக்தி'' வெற்றியை தொடர்ந்து  ''பாஸ்  என்கிற  பாஸ்கரன்''  வெற்றியை நோக்கி செல்லுகிறது .

Sunday, September 5, 2010

மீண்டும் எமி ஜாக்சன் [ துரையம்மா ]

கெளதமின் காக்க காக்க , வாரணம் ஆயிரம் ஆகிய மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து மீண்டும் சூரியாவுடன் கூட்டணி செருகிறார். இரு படங்களும் மக்களுக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது .


தற்போது கெளதம் , நடுநிசி நாய்கள் படத்தை இயக்கி வருகிறார் . பாடல்கள் அற்ற இப் படம் முடிவடையும் காலகட்டத்தில் உள்ளது .  இதையடுத்து தமிழில் வெளிவந்து வெற்றியடைந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் இந்தி ரீமேக்கையும் இயக்கி வருகிறார் .


இதற்கு பின்  , சூரியாவை வைத்து இயக்குகிறார் . இந்தப் படத்தில் சூரியா ஜோடியாக மதராசப்பட்டினத்தில் நடித்த ஆங்கில அழகி '' எமி ஜாக்சன் ''
[ துரையம்மா ]  நடிப்பார் என சினிமா வட்டாரம் கருதுகிறது.

Tuesday, August 31, 2010

இனிது இனிது இளமை இனிது


'' இனிது இனிது '' இது கல்லூரின் வசந்தகாலம் . எங்களையும் அந்த கல்லூரியில் படிப்பவர்கள் போல ஈர்த்துள்ளது . ஒவ்வோருவருக்கும்  முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் கே.வி.குகன் . இந்தப் படத்தை பார்த்ததும் கல்லூரி வாழ்க்கையை தவற விடக்கூடாது என்று ஓர் எண்ணம் எழுகிறது.

ஒரு பொருளியலாலர் கல்லூரியில் சேரும் முதலாண்டு மாணவர்களுக்கும் கடைசியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கும் வருகிற மோதல் படத்தின் ஆனிவேர் என்று கூறலாம்.
நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு பெண்ணை காதலிப்பதும் அவர்களுக்குள் ஈகோவும், பிரச்சனையும் முட்டிக் கொண்டு நேரில் பார்த்தால் திமிருவதும் ரொம்பவே இயல்பு . ஷ்ராவ்வ்வ்வ்... என்று வார்த்தைக்கு வார்த்தை உருகும் அந்த டைசன் கேரக்டர் அப்பழுக்கற்ற அழகு. சீனியரை காதலிக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இருந்தாலும், அவரை கரெக்ட் பண்ண அலைவதை கூச்சமில்லாமல் ரசிக்கலாம் . அந்த சீனியர் மாணவியின் திமிரான லுக் ஒன்றே போதும், திரும்ப திரும்ப ரசிப்பதற்கு ! 




பால்பாண்டி மூலம் தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு கிராமத்திலிருந்து என்ஜினியரிங் படிக்க வரும் ஏழை மாணவர்கள் இங்கு சேர்ந்து எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர்.இயக்குனர் குகனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.இசை மிக்கி ஜே.மேயர் என்ற புதியவர் இசையமைத்திருக்கிறார். 

மொத்ததில் இனிது இனிது ஒரு இனிமையான அனுபவம்