மீண்டும் இயக்குனர் மித்திரன் ஜவகர்ரும் இளம் புயல் தனுஸ்சும் சேர்ந்து கைகோர்த்த நேரம் தீபாவளிதான் . யாரடி நீ மோகினி மாபெரும் வெற்றியை தொடர்ந்து குட்டி எக்ஸ்பிரஸ் முடித்து தற்பொழுது உத்தம புத்திரன் அடுத்த கட்ட வெற்றியை நோக்கி செல்லுகிறது . நல்லதோர் குடும்பம் பழ்கலைகளகம் என்பதற்கு எடுத்துக் காட்டு .
தெலுங்கில் வெளிவந்த '' ரெடி '' படத்தின் மறுபதிவே இது . ஆனால் இப் படத்தில் இயக்குனர் தனது முழு முயற்சியை காட்டியுள்ளார் . விஜய் ஆன்டனியின் இசை வழ்க்கம்போல அதிரடியாகத்தான் இருக்கும் ஆனால் இப் படத்தில் ஒரே சரவெடி தான் .
பாடல்கள் ஒவ்வொன்றும் புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது . ஜெனிலியா அப்பற்ற அழகு டா சாமி . படம்முழுவதும் ஜெனி ஜெனி ஜெனி தான் . நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்துள்ளார் . தன் ஒரு லுக்காலே பார்வையாளர்களை சிறைக்கொண்டார் . தனுஸ் தனுஸ் தான் , ஸ்டையில் அப்படியே தனது மாமாவை போலவேதான் . ஆனால் எளிமை .
உண்மையிலும் தனுஸ்சுக்கு ஏற்ற ஜோடிதான் ஜெனிலியா . அதேபோல் பல பல கோ ஸ்டார்களும் நடித்துள்ளனர் . எல்லோருக்கும் ஒரே சமயத்தில் வாய்ப்பு கோடுத்தது பெரிய விடயம் . விவேக்கும் தனுஸ்சும் சேர்ந்து அடிக்கும் காமெடி அருமை . அப்பாவியாக வருகிறார் விவேக் .
மொத்தத்தில் உத்தம புத்திரன் குடும்பத்துடன் சென்று உல்லாசமாக சிரித்து அனுபவித்து வரவேண்டுய ஒரு காதல் , குடும்பப் கலக்கல் படம் ........
இயக்குனர் உண்மையிலும் ஒரு உத்தமபுத்திரன் தான் என்பதில் சந்தேகமில்லை ......



No comments:
Post a Comment