நண்பன் , இது இந்தியில்[3 IDIOTS ]என்று வெளியிடப்பட்ட படம் ஆகும். இப் படத்தின் தமிழ் பதிப்பு தான் '' நண்பன் '' . அமோக வரவேற்பை பெற்றது . இதற்கு காரணமே இப் படத்தில் நடித்தவர்களே என்று கூறலாம் . இதையல்லாவற்றிலும் இயக்குனர் ஷங்கரின் நுற்பமான இயக்கமே காரணம். விஜய் , ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பு பிரமாதம் குறிப்பாக சத்தியராஜின் நடிப்பிற்கு உன்மையிலும் ஒரு பெரிய விருது குடுக்கலாம் . சத்யன் கதாபாத்திரத்துகு ஏற்ற பொருந்தியுள்ளார். நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில் நிச்சயமா ஜெயிப்பீர்கள் என்பதுதான்.படம் முடிந்து வெளியே வந்தாலும் நம் நினைவுக்கு வருவது நாம் பார்த்தது விஜய் படம்தானா என்ற எண்ணம்தான். ஷங்கர் இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பாப்பு இருந்தது அதை அதிகமாகவே நிறைவேற்றியிருக்கிறது நண்பன்.
மொத்தத்தில் பஞ்சவன் பாரிவேந்தன் ஒரு ''பாரி'' கொடை வள்ளல் !! இவனைப் போல் நண்பன் கிடைப்பது அரிது . ஆல்ல் இச் நெல்ல் என்ற மந்திரம் உண்மையிலும் ஒரு சக்தி வாய்ந்தது . ஆக மொத்தத்தில் இப் படத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடங்கள் பல ...
No comments:
Post a Comment