Tuesday, August 31, 2010

இனிது இனிது இளமை இனிது


'' இனிது இனிது '' இது கல்லூரின் வசந்தகாலம் . எங்களையும் அந்த கல்லூரியில் படிப்பவர்கள் போல ஈர்த்துள்ளது . ஒவ்வோருவருக்கும்  முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் கே.வி.குகன் . இந்தப் படத்தை பார்த்ததும் கல்லூரி வாழ்க்கையை தவற விடக்கூடாது என்று ஓர் எண்ணம் எழுகிறது.

ஒரு பொருளியலாலர் கல்லூரியில் சேரும் முதலாண்டு மாணவர்களுக்கும் கடைசியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கும் வருகிற மோதல் படத்தின் ஆனிவேர் என்று கூறலாம்.
நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு பெண்ணை காதலிப்பதும் அவர்களுக்குள் ஈகோவும், பிரச்சனையும் முட்டிக் கொண்டு நேரில் பார்த்தால் திமிருவதும் ரொம்பவே இயல்பு . ஷ்ராவ்வ்வ்வ்... என்று வார்த்தைக்கு வார்த்தை உருகும் அந்த டைசன் கேரக்டர் அப்பழுக்கற்ற அழகு. சீனியரை காதலிக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இருந்தாலும், அவரை கரெக்ட் பண்ண அலைவதை கூச்சமில்லாமல் ரசிக்கலாம் . அந்த சீனியர் மாணவியின் திமிரான லுக் ஒன்றே போதும், திரும்ப திரும்ப ரசிப்பதற்கு ! 




பால்பாண்டி மூலம் தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு கிராமத்திலிருந்து என்ஜினியரிங் படிக்க வரும் ஏழை மாணவர்கள் இங்கு சேர்ந்து எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர்.இயக்குனர் குகனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.இசை மிக்கி ஜே.மேயர் என்ற புதியவர் இசையமைத்திருக்கிறார். 

மொத்ததில் இனிது இனிது ஒரு இனிமையான அனுபவம்

Monday, August 23, 2010

தமிழில் ஒரு டைடானிக்

''மதராசப்பட்டினம்'' மக்களை திரும்பிபார்க்க வைத்த படம். விஜய், பார்வையாளர்களை தம் திரைக்குள் தொடக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொரு காட்சியையும் சுவைக்க வைக்கிறார்.

லண்டனில் இருந்து வருகின்ற கதாநாயகி [துரையம்மா] மதராசப்பட்டினத்தில் வாழும் சாதாரண துணி வெழுக்கும் மக்களில் ஒருவனான கதாநாயகன்  [பரிதி] மேல் வருகிறது காதல். பல கஷ்டங்களுக்கு பின் இருவரும் இணைகின்றார்களா என்பதே கதைச் சுருக்கம். ஆரியாவின் நடிப்பு எல்லோரையும் பிரம்மிக்க வைக்கிறது. அதே போல் தமிழ் தெரியாத அமி ஜாக்சன் தம் கண்களாளே எல்லோரையும் கட்டிப்போடுகிறாள் . ஆரியா ஆங்கிலதில் கதைப்பது மிகவும் நகைச்சுவையாக உள்ளது . அதே போல் இப்படத்தில் மொழி பெயர்ப்பாளராக வரும்   ஹனிபா    தம்மை புகைப்படம் எடுக்கும் போதெல்லாம் விறைப்பாக போஸ் கொடுப்பதும் , கதாநாயகிக்கு தமக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறும் காட்சிகள் மூலம் மக்களை சிரிப்பு வெள்ளத்தில் தள்ளியிருக்கிறார் இயக்குனர் .

ஜி.வி.பிரகாஸ் இசையில் இரண்டு பாடல்கள் காதிற்கு இனிமையை தந்துள்ளது. ''வாம்மா துரையம்மா '' பாடல் வரிகள் உண்மையை உணர்த்துகிறது. ''பூக்கள் பூக்கும் தருணம்'' என்ற பாடல் காதில் தேன்னை பாய்க்கிறது. இத்தகையான படங்கள் ஆங்கில இயக்குனர்களால் மட்டும் தான் எடுக்க முடியுமா ?? தமிழர்களாளும் முடியும் என்று நிருபித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.இதில் இருந்து அவரது முயற்சி தெரிகிறது. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை ஊட்டியிருக்கிறார்.

சென்னையைய் மதராசபட்டினமாக காட்டுவது அவ்வளவு சுலபமா ? 1945ல் உள்ள சாலைகள் , கூவம் ஆறு , ரயில் நிலையம் , ஸ்பென்சர் பிளாசா , டிராம் போன்றவற்றை தம் கலையால் காட்டியுள்ளார் செல்வகுமார் .

மொத்தத்தில் இப்படம் ஒரு தமிழ் டைடானிக் அனுபவத்தை உணர்த்துகிறது.

Friday, August 20, 2010

மாதவனின் மறுப்பு

இந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிளே மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதனால் இப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிடுவதிற்கு ஜெமினி பிலிம் சர்க்கீயூட் உரிமையை பெற்றுள்ளது . இப்படத்தை மாபெரு இயக்குனர் சங்கர் இயக்குகிறார்.


தமிழில் உருவாகும் இப்படத்தை அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்தியில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ,இப்படத்தில் நடிக்க மாதவன் மறுத்துவிட்டார்.

இதைப்பற்றி மாதவன் விளக்கியதாவது :
எனக்கு இப்படத்தை தமிழில் நடிப்பதிற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆனால் வேறு பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் , இப் படத்தில் ஆர்வம் காட்டமுடியவில்லை .

தமிழை விட்டு விலகுவது ஏன் ?????

Wednesday, August 18, 2010

அழுதார் சூப்பர் ஸ்டார்!!!!

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் ,ஈழத் தமிழர்களின் உண்மைகளை கேட்டதும் கண் கலங்கினார் ரஜினி.
கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன்,கவிஞர் காசிமுத்து,ஏ.வி.எம்.சரவணன்,இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்,மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையைச் சேர்ந்த கம்பவாரிதி ஜெயராஜ் மேடையில் கூறுகையில்:
நானும் தமிழ் இனத்தை சேர்ந்தவன்.உண்மையான சுதந்திரம் என்பது ஒருவன் ஒருவனை சுதந்திரமாக நடமாட,கதைக்க விடுவதே ஆகும்.அப்படிப்பட்ட சுதந்திரமில்லாத நாட்டினை சேர்ந்தவன்.என் நாட்டு சுதந்திரத்தை வாழ்த்தமுடியாமல் உங்கள் நாட்டு சுதந்திரத்தை  வாழ்த்துகிறேன்.....

கம்பவாரிதியின்  பேச்சை ரஜினி முன்வரிசையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தர். ஈழத்தமிழர்களின் சுதந்திரமற்ற நிலையை கேட்டதும் கண் கலங்கினார்.

ரஜினி கண் கலங்கினால் மட்டும் போதுமா ஈழம் விடிவதிற்கு...!

Monday, August 16, 2010

சூரியாவுக்கும் அசினுக்கும் ஆப்பு

இலங்கையில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் கலைஞர்களின் படங்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்படுவதில்லை என முடிவுசெய்யப்பட்டிருந்தது.

விவேக் ஒபராய், சல்மான் கான், அசின் போன்றோர் கலந்துகொண்டனர்.
இதனால் ஓடிக்கொண்டிருந்த கேட்ஸ் படம் திரையரங்குகளில் அகற்றப்பட்டது


அசின் அம்மணி இந்தி திரைப்படத்தில் கொடிகட்டிப் பறக்கத்தொடங்கியதால்;அவருக்கு தமிழகத்தில் மீனவர் செத்தால் என்ன? இலங்கையில் தமிழர் இறந்தால் என்ன? என்பது அவர்நிலை!  சூரியாவோ.........இலங்கை விடயம் முடிந்துபோன ஒன்று என்று சொல்லிவிட்டார். 

 இந்நிலையில் விவேக் ஒபராயுடன் சூரியா இணைந்து நடித்த ரத்தசரித்திராவும், சல்மான்கானும் அசினும் இணைந்து நடித்த ரெடியும் தமிழக திரையரங்குக்கு வரவுள்ளன.இப்படங்களை தமிழகத்தில் திரையிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் கண்ணன் அறிவித்து உள்ளார்.


திரையரங்கு அதிபர்கள் செயற்குழு உறுப்பினர் திருச்சி ஸ்ரீதர் இதுபற்றி கூறும்போது, அனைத்து திரைப்பட அமைப்புகளின் கூட்டுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இப்பிரச்சினை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அதில் ஒருமனதாக எடுக்கப்படும் முடிவை திரையரங்கு அதிபர்கள் சங்கம் அமுல்படுத்தும் என்றார்.


தமிழனுக்கு என்றுதான் சொரணை வந்திருக்கு???

தெலுங்கில் எந்திரன் சாதனை

33  கோடிக்கு எந்திரனின் தெலுங்கு உரிமை விற்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் ஒரு மொழிமாற்றுப்படம் அதிக பணத்தில் விற்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

கன்னடத்திலும் 9.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. கன்னட மெகா பட்ஜெட் திரைப்படங்கள்கூட 9.5 கோடியை தொட்டதே இல்லை என்று எந்திரன் வட்டாரம் கூறுகின்றது.

தமிழகத்தில் எந்திரன் எவ்வளவு வசூல் செய்வான் என்று  நினைத்தால் தலையே சுற்றுகின்றது!!!