''மதராசப்பட்டினம்'' மக்களை திரும்பிபார்க்க வைத்த படம். விஜய், பார்வையாளர்களை தம் திரைக்குள் தொடக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொரு காட்சியையும் சுவைக்க வைக்கிறார்.
லண்டனில் இருந்து வருகின்ற கதாநாயகி [துரையம்மா] மதராசப்பட்டினத்தில் வாழும் சாதாரண துணி வெழுக்கும் மக்களில் ஒருவனான கதாநாயகன் [பரிதி] மேல் வருகிறது காதல். பல கஷ்டங்களுக்கு பின் இருவரும் இணைகின்றார்களா என்பதே கதைச் சுருக்கம். ஆரியாவின் நடிப்பு எல்லோரையும் பிரம்மிக்க வைக்கிறது. அதே போல் தமிழ் தெரியாத அமி ஜாக்சன் தம் கண்களாளே எல்லோரையும் கட்டிப்போடுகிறாள் . ஆரியா ஆங்கிலதில் கதைப்பது மிகவும் நகைச்சுவையாக உள்ளது . அதே போல் இப்படத்தில் மொழி பெயர்ப்பாளராக வரும் ஹனிபா தம்மை புகைப்படம் எடுக்கும் போதெல்லாம் விறைப்பாக போஸ் கொடுப்பதும் , கதாநாயகிக்கு தமக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறும் காட்சிகள் மூலம் மக்களை சிரிப்பு வெள்ளத்தில் தள்ளியிருக்கிறார் இயக்குனர் .
ஜி.வி.பிரகாஸ் இசையில் இரண்டு பாடல்கள் காதிற்கு இனிமையை தந்துள்ளது. ''வாம்மா துரையம்மா '' பாடல் வரிகள் உண்மையை உணர்த்துகிறது. ''பூக்கள் பூக்கும் தருணம்'' என்ற பாடல் காதில் தேன்னை பாய்க்கிறது. இத்தகையான படங்கள் ஆங்கில இயக்குனர்களால் மட்டும் தான் எடுக்க முடியுமா ?? தமிழர்களாளும் முடியும் என்று நிருபித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.இதில் இருந்து அவரது முயற்சி தெரிகிறது. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை ஊட்டியிருக்கிறார்.
சென்னையைய் மதராசபட்டினமாக காட்டுவது அவ்வளவு சுலபமா ? 1945ல் உள்ள சாலைகள் , கூவம் ஆறு , ரயில் நிலையம் , ஸ்பென்சர் பிளாசா , டிராம் போன்றவற்றை தம் கலையால் காட்டியுள்ளார் செல்வகுமார் .
மொத்தத்தில் இப்படம் ஒரு தமிழ் டைடானிக் அனுபவத்தை உணர்த்துகிறது.



No comments:
Post a Comment