இலங்கையில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் கலைஞர்களின் படங்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்படுவதில்லை என முடிவுசெய்யப்பட்டிருந்தது.
விவேக் ஒபராய், சல்மான் கான், அசின் போன்றோர் கலந்துகொண்டனர்.
இதனால் ஓடிக்கொண்டிருந்த கேட்ஸ் படம் திரையரங்குகளில் அகற்றப்பட்டது
அசின் அம்மணி இந்தி திரைப்படத்தில் கொடிகட்டிப் பறக்கத்தொடங்கியதால்;அவருக்கு தமிழகத்தில் மீனவர் செத்தால் என்ன? இலங்கையில் தமிழர் இறந்தால் என்ன? என்பது அவர்நிலை! சூரியாவோ.........இலங்கை விடயம் முடிந்துபோன ஒன்று என்று சொல்லிவிட்டார்.
இந்நிலையில் விவேக் ஒபராயுடன் சூரியா இணைந்து நடித்த ரத்தசரித்திராவும், சல்மான்கானும் அசினும் இணைந்து நடித்த ரெடியும் தமிழக திரையரங்குக்கு வரவுள்ளன.இப்படங்களை தமிழகத்தில் திரையிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் கண்ணன் அறிவித்து உள்ளார்.
திரையரங்கு அதிபர்கள் செயற்குழு உறுப்பினர் திருச்சி ஸ்ரீதர் இதுபற்றி கூறும்போது, அனைத்து திரைப்பட அமைப்புகளின் கூட்டுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இப்பிரச்சினை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அதில் ஒருமனதாக எடுக்கப்படும் முடிவை திரையரங்கு அதிபர்கள் சங்கம் அமுல்படுத்தும் என்றார்.
தமிழனுக்கு என்றுதான் சொரணை வந்திருக்கு???


No comments:
Post a Comment